×

மீண்டும் இந்தியாவை சீண்டும் கே.பி.ஒலி ‘யோகா உருவானது நேபாளத்தில்தான்’

புதுடெல்லி: ‘யோகா உருவானது நேபாளத்தில்தான், இந்தியாவில் அல்ல’ என்று நேபாள பிரதமர் கே.பி.ஒலி மீண்டும் இந்தியாவை சீண்டும் விதமாக பேசி உள்ளார். சர்வதேச யோக தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பலுவதாரில் உள்ள தனது இல்லத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘யோகா உருவானது நேபாளத்தில்தான், இந்தியாவில் அல்ல. இந்திய வல்லுநர்கள் இது குறித்த உண்மைகளை மறைத்து வருகின்றனர். இப்போது இருக்கும் இந்தியா கடந்த காலத்தில் இல்லை. அந்த நேரத்தில் இந்தியா வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது’’ என்றார். ஏற்கனவே ஒலி, ‘‘ராமரின் பிறப்பிடமான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. ராமர் ஒரு நேபாளி. உண்மையான அயோத்தி பிர்குஞ்சின் மேற்கில் உள்ள தோரி என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ராமர் பிறந்துள்ளார்’’ என சர்ச்சையை கிளப்பினார். தற்போது, யோகா குறித்து மீண்டும் இந்தியாவை சீண்டும் விதமாகஅவர் கருத்து கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post மீண்டும் இந்தியாவை சீண்டும் கே.பி.ஒலி ‘யோகா உருவானது நேபாளத்தில்தான்’ appeared first on Dinakaran.

Tags : K. P. Oli ,India ,New Delhi ,Nepal ,KP Oli ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...